தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறை தீர்க்கும் அலுவலர் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறை தீர்க்கும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2022-12-29 22:47 IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை தீர்ப்பதற்காக கோபிநாத் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 8925811322 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsperson.rpt@gmail.com ஆகும்.

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்