போலீசாருக்கு, சூப்பிரண்டு பாராட்டு

சாராயம், மது பாட்டில்கள் கடத்தியவர்களை கைது செய்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-03-26 18:45 GMT

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது. இதனை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டன. இங்கிருந்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் ஏராளமான சாராயம். மதுபாட்டில் கடத்தியவர்களை கைது செய்து, அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 1- ந்தேதி முதல் கடந்த 25- ந்தேதி வரை தற்காலிக சோதனை சாவடிகள் வழியாக புதுச்சேரி மாநில, சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக, 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காரை பறிமுதல் செய்து, 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் திறமையாக செயல்பட்டு மது கடத்தியவர்களை கைது செய்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார். மேலும் திறமையை ஊக்குவிக்கும் விதமாக வெகுமதியும் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்