அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் 13,200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் 13,200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-23 16:41 GMT

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி மற்றும் சென்னையைச் சேர்ந்த நந்தவனம் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து ராஜாளி மியாவாக்கி வனம் என்ற பெயரில் மண் வளத்தை அதிகப்படுத்தி, பசுமைப் பரப்பு, மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டிங் அலுவலர் கமோடர் ஆர்.வினோத் குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் வேம்பு, வேங்கை, பூவரசு, மந்தாரை, நொச்சி உள்ளிட்ட 20 வகையான 13,200 மரக்கன்றுகளை ஜப்பானிய நுட்பமான மியாவாக்கியின் முறையில் நட்டனர். நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். ராஜாளி அலுவலர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்