தரைப்படை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
தரைப்படை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;
திருச்சி தேசிய கல்லூரியில் தேசிய மாணவர் படையின் தரைப்படையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 35 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்படையில் இருந்த மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ்நாடு பெட்டாலியனின் அதிகாரி அருண்குமார் தொடங்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் குமார் பேசும்போது, தேசிய மாணவர் படை மாணவர்கள் நடத்தையிலும், ஒழுக்கத்திலும் சிறப்பான பயிற்சி பெற்று கல்லூரி வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார். இதில் கல்லூரி என்.சி.சி. அலுவலர் கேப்டன் ராமர், முன்னாள் என்.சி.சி.அலுவலர் டாக்டர் கேப்டன் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.