கம்பம் பஸ் நிலையத்தை சுற்றிமதுக்கடைகள் இருப்பதால் பயணிகள் அச்சம் :நடவடிக்கை கோரி கலெக்டரிடம், வியாபாரிகள் மனு

கம்பம் பஸ் நிலையத்தை சுற்றி மதுக்கடைகள் இருப்பதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

Update: 2023-03-23 18:45 GMT

கம்பம் அரசு மருத்துவமனையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் செயல்படும் சீமாங் சென்டர், அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலர் பொன்னரசனிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கம்பம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்க தலைவர் தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் டிஸ்கோ அலாவு தீன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், தேவையற்ற அதிகமான பஸ் நிறுத்தங்கள் இருப்பதால், பயணிகள் கம்பம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் கம்பம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் கம்பம் சிக்னல் வழியாக வந்து அமராவதி தியேட்டர் வழியாக செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் பஸ் நிலையத்தை சுற்றி மதுக்கடைகள் உள்ளதால் சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்கள் தொல்லை தாங்க முடியாமல் பயணிகள் பஸ் நிலையம் வர அச்சம் அடைகின்றனர். இதனால் நகராட்சி கடைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது கம்பம் நகராட்சி ஆணையர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்