மதுவிற்ற வாலிபர் கைது

Update:2023-09-29 00:30 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொம்மிடி- தர்மபுரி சாலையில் சென்றபோது போலீசாரை கண்டதும் வெள்ளை நிற சாக்குப்பையுடன் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த காசிராஜா மகன் விஜய் (வயது 29) என்பதும், சாக்குப்பையில் மதுபாட்டில் வைத்து விற்பனை செய்தும் தெரியவந்தது. சில பாட்டில்கள் திறந்தும், சில பாட்டில்கள் மூடப்பட்டு இருந்தது. திறந்த பாட்டில்களில் அதிக போதை ஏறுவதற்காக ஊமத்தங்காய் கலக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் விஜயை கைது செய்தனர். அவரிடம் இருந்து 158 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்