பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் 4 ரோடு அருகே உள்ள ஒரு மறைவிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிய பரமத்திவேலூர் மீனவர் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 20), பொத்தனூர் பாலாஜி நகரை சேர்ந்த கார்த்திக் (27), அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (39), பரமத்திவேலூரை சேர்ந்த மலையாளி (53), மோகனூர் தாலுகா மணப்பள்ளியை சேர்ந்த குரு (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,050 பறிமுதல் செய்யப்பட்டது.