நாமக்கல்:
ராசிபுரம் தாலுகா ராசாபாளையம் வணங்காமுடி தோட்டத்தை சேர்ந்தவர் பாவாயி (வயது 66). கணவர் இறந்த நிலையில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் அவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார்கூடல்பட்டி கப்பலூத்து பகுதியை சேர்ந்த தொழிலாளியான செந்தில் (38) அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் செந்திலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங், செந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்திலிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.