நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது
நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்;
தேவகோட்டை
தேவகோட்டையில் பிரபலமான நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வேலை பார்த்த சாத்தையா(வயது 40) என்ற ஊழியர் நகையை மெருகுபோட கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் சாத்தையா தான் மெருகு போட எடுத்து நகைகளில் இருந்து சிறிது சிறிதாக சுரண்டி சுமார் 10 பவுன் அளவிற்கு திருடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியர் சாத்தையாவை கைது செய்தனர்.