40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update:2023-05-10 00:15 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமக்குடியில் இருந்து வந்த ஒரு மினி லாரியை தடுத்து சோதனை செய்த போது அதில் 1,740 கிலோ எடை கொண்ட 40 மூடை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார், ரேஷன் அரிசியை கடத்தி வந்த கடலாடி தாலுகா பிள்ளையார் பாளையம் கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 23), விஜய் மணி (29) ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்