மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது

மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-23 00:15 IST

ஆம்பூர்

மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் ஆம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப் பகுதியை ஒட்டி அவ்வழியாக வந்து கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (வயது 44) என்பதும், அவர் வைத்திருந்த பையில் 4 மான் கொம்புகள் இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 மான் கொம்புகள் மற்றும் அறிவாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்