மது பாட்டில்களில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவர் கைது

மது பாட்டில்களில் போதை மாத்திரைகளை கலந்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-17 20:45 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தூத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை தலைமையிலான போலீசார் குருவாடி, மாத்தூர், காமரசவள்ளி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோமான் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சட்டநாதன்(வயது 42) என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்றதை அறிந்து, அவரை கைது செய்து, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது ஒரு மது பாட்டில் மட்டும் மூடி திறந்து மதுவின் அளவு குறைவாக இருந்துள்ளது. அதனை பரிசோதித்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிக லாபம் பெற டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வந்து பாதி மதுவிற்கு பதிலாக தண்ணீரில் போதை மாத்திரைகளை கலந்து, அதனை சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்