சேரிபாளையம் அரசு பள்ளியில் கலைத்திருவிழா
சேரிபாளையம் அரசு பள்ளியில் கலைத்திருவிழா;
நெகமம்
நெகமம் அடுத்த சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுந்தரசாமி முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் கோவிந்தராஜ், பள்ளி ஆசிரியர் வள்ளியம்மாள், முன்னாள் ஆசிரியர் காளியப்பன், மோகனசுந்தரவடிவேல் ஆகியோர் பேசினார்கள். விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் சிவலிங்கம் நன்றி கூறினார்.