நீர்வரத்து அதிகரித்ததால் - பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியது

பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கடல் போல் காட்சி அளிக்கிறது.

Update: 2023-01-01 08:06 GMT

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. இதனால் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கறுதி கடந்த 9-ந் தேதி முதல் உபரநீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 23-ந் தேதி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,010 கனஅடியாக உயர்ந்தது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று நீர்மட்டம் 35 அடியாக பதிவாகியது. 3.231 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்