வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு

கணியம்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-09-01 22:41 IST

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாலாத்துவண்ணான் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ரேஷன் கடை கட்டும் பணியை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, வேப்பம்பட்டு ஊராட்சியில் ரூ.1.59 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, ரூ.6.64 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, கனிகனியான் ஊராட்சியில் ரூ.7¾ லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன், ராஜன் மற்றும் ஏழுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்