மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

Update: 2022-06-08 18:51 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து கலெக்டர் லலிதா வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், முழங்கை ஊன்றுகோல், நடை உபகரணம், கருப்புகண்ணாடி, எழுத்து உருபெருக்கி, பார்வையற்றோருக்கான மடக்குகுச்சி, நவீனமடக்குகுச்சி, காதுக்குபின்அணியும் காதொலிகருவி, கை கடிகாரம், பார்வையற்றோருக்கான எலக்டிரிக்கல் ரீடர், செல் போன், நவீன செயற்கைகால்கள், தையல் எந்திரம், பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

26-ந் தேதி கடைசி நாள்

எனவே மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்பஅட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ 1 ஆகியவற்றுடன் ரத்தவகை, கைப்பேசி எண், கையொப்பம் மற்றும் கைரேகை வைத்த மனுவுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்