மோட்டார்சைக்கிள் மோதி ஜோதிடர் பலி
கீழ்பென்னாத்தூரில் மோட்டார்சைக்கிள் மோதி ஜோதிடர் பலியானார்.;
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் மோட்டார்சைக்கிள் மோதி ஜோதிடர் பலியானார்.
கீழ்பென்னாத்தூரையடுத்த சோமாசிபாடி சோ.காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் காசி (வயது 65). ஜோதிடரான இவர் ஜோதிடம் பார்ப்பதற்காக கருங்காலிகுப்பத்துக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த காசியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசி இறந்து விட்டார். இது குறித்து காசியின் மகன் கண்ணன், கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.