எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;

Update:2023-07-31 03:32 IST

மொடக்குறிச்சி

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு எழுமாத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 58 ஆயிரத்து 867 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.22.15-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.90-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 182-க்கு ஏலம் போனது. 

Tags:    

மேலும் செய்திகள்