வேலூர்: சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சீரடி சாய்பாபா மற்றும் சத்ய சாய்பாபா சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.;

Update:2025-12-08 17:00 IST

சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்த பக்தர்கள்

வேலூர் பில்டர் பெட் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, கோ பூஜை, புதிய விக்ரகம் பிரதிஷ்டை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை, நாம சங்கீர்த்தனம் நடந்தது.

இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹுதியைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சீரடி சாய்பாபா மற்றும் சத்ய சாய்பாபா சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்