அரசு பஸ்சை நிறுத்தாததால் கண்டக்டர் மீது தாக்குதல்

அரசு பஸ்சை நிறுத்தாததால் கண்டக்டரை தாக்கிய தே.மு.தி.க. பிரமுகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-11 16:27 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 55). இவர் விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்தார். பாலப்பட்டிற்கு வந்ததும் பஸ்சை நிறுத்துமாறு கோவிந்தன் கூறினார். அதற்கு கண்டக்டர் கொளஞ்சி(52), பாலப்பட்டில் பஸ் நிற்காது என்று கூறினார். இதனால் கோவிந்தன், தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். உடனே உறவினர்கள் ஒன்று திரண்டு வந்து அரசு பஸ்சை வழிமறித்து, கண்டக்டரை தாக்கினர். இது குறித்து கண்டக்டர் கொளஞ்சி அனந்தபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொளஞ்சியை தாக்கியதாக விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் தயாநிதி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்