விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update:2023-09-23 05:45 IST

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூதிப்புரம் சன்னாசியப்பன் கோவில் சாலையில் மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மணிகண்டன் முகத்தில் துணியால் மூடி, தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து மணிகண்டன் பழனிசெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்