கே.எஸ்.அழகிரி மனைவி மறைவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நேற்று காலமானாா்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானாா்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கே.எஸ்.அழகிரியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது மனைவி வத்சலா மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக நேற்று (11.1.2026) முதல்-அமைச்சர், உயிருக்கு உயிராக, பக்கத்துணையாக இருந்த வாழ்விணையரை இழந்து வாடும் சகோதரர் கே.எஸ். அழகிரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.