குற்றாலத்தில் காருக்கு பார்க்கிங் கட்டணம் கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல்

குற்றாலத்தில் காருக்கு பார்க்கிங் கட்டணம் கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-13 18:45 GMT

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். நேற்று மாலை குற்றாலத்திற்கு ஒரு காரில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் ஐந்தருவிக்கு குளிக்க புறப்பட்டனர். அருவிக்கு செல்லும் சாலையில் உள்ள வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் ஊழியர்கள் அந்த காரை மறித்து பணம் கேட்டுள்ளனர்.

அப்போது காரில் இருந்த ஒருவர் தான் எம்.எல்.ஏ. மகன் என்றும், பணம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காரில் வந்தவர்கள் கம்பால் ஊழியர்களை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்