கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை மிரட்டல்

மணல்மேடு அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-01 00:15 IST

மணல்மேடு:

மணல்மேடு அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

கலைஞர் உரிமைத்தொகை

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் உதயகுமார் (வயது 38) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கலைஞர் உரிமைத்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தலைஞாயிறு வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (54), அவரது மகன் தீனா என்கிற திவாகரன் (20) ஆகியோர், கலைஞர் உரிமைத்தொகை பெறுவதில் பெயர் இடம் பெறவில்லை என்றுக்கூறி, கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கைது

மேலும் அவர்கள், கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் அடித்ததோடு கொலைமிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனா என்கிற திவாகரனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரது தந்தை முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்