வீட்டுமனை பிரச்சினையில் விதவையை கொல்ல முயற்சி

கள்ளக்குறிச்சி அருகே வீட்டுமனை பிரச்சினையில் விதவையை கொல்ல முயற்சி மாமியார் உள்பட 5 பேர் கைது

Update: 2023-01-27 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி லதா(வயது 38). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இந்நிலையில் 5 சென்ட் வீட்டு மனை தொடர்பாக லதாவுக்கும், இவரது மாமியார் கொளஞ்சி(70) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று கொளஞ்சியின் தூண்டுதலின் பேரில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாத்தியம் கிராமத்தை சார்ந்த வேலுசாமி மகன் அருண்குமார்(29), வேப்பூர் அருகே கோ.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த மேகராஜன் மகன் முருகன்(30), வேலுசாமி மகன் சஞ்சய்(21), வீரன் மகன் அருண்குமார்(22) ஆகியோர் வீரசோழபுரத்தில் உள்ள லதா வீட்டுக்கு சென்று அவரையும், அவரது மகள் வர்ஷா(15) என்பவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த லதா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வே.அருண்குமார், முருகன், சஞ்சய், வீ.அருண்குமார் மற்றும் கொளஞ்சி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்