7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி

கடலூரில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2022-06-11 01:09 IST

கடலூர், 

கடலூர் கோண்டூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பரமசிவம் (வயது 35). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நத்தப்பட்டு மெயின்ரோடு அருகே நடந்து சென்ற 7 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து, தனியாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறுமியின் தாய் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பரமசிவம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்