கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-02-18 00:15 IST


சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூஜை செய்வதில் தகராறு

திருப்பத்தூரை அடுத்துள்ள தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் உள்ளது.

இந்த கோவிலில் பூஜை செய்வதில் இந்த கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வருவாய் துறையினர் வெள்ளைகண்ணுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மாரிமுத்து (54),அவரது மனைவி கவுரி (50) ஆகிய 2 பேரும் நேற்று மதியம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

தீக்குளிக்க முயற்சி

திடீரென்று அவர்கள் 2 பேரும் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்து சிவகங்கை நகர் போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்