விசுவநாதம் பிள்ளை நினைவு தினம்; அவரது புகழை போற்றி வணங்குவோம் - நயினார் நாகேந்திரன்

தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த விசுவநாதம் புகழை போற்றி வணங்குவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-19 10:41 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முத்தமிழ் இயல், இசை, நாடகம் என மூன்றையும் தனது வாழ்நாளில் உயிர்ப்பித்து, தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொன்ன முத்தமிழ் காவலர் விசுவநாதம் பிள்ளையின் நினைவு தினம் இன்று.

தமிழ் மொழியின் செம்மையும் செழுமையும் தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் கல்வி, கலை, சமூக சேவை எனப் பல தளங்களில் அவர் செய்த அர்ப்பணிப்பு, இன்று தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்குகிறது. அவரது சிந்தனைகள், உரைகள், செயல்கள் அனைத்தும் தமிழின் ஆன்மாவை பாதுகாக்கும் காவலாக இருந்தன.

அவரது நினைவு தினமான இந்நாளில், தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த விசுவநாதம் புகழை போற்றி வணங்குவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்