பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-07-13 00:08 IST

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்புவிப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139, 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக மாற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் அச்சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்