கருப்பர், முனியன் கோவில் ஆடி படையல் விழா
கருப்பர், முனியன் கோவில் ஆடி படையல் விழா நடந்தது.;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே பருகுபட்டி கிராமத்தில் கருப்பர், முனியன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதியில் ஆடி படையல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 11-வது ஆண்டாக இந்த ஆண்டு அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக கருப்பர், முனியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னத்திற்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஐந்து வகை காய்கறிகளுடன், தலை வாழை இலை போட்டு அன்னதான விழா நடைபெற்றது. சிங்கம்புணரி நகர், பருகுபட்டி, கண்ணமங்கலப்பட்டி, நாட்டாமங்கலம், சாந்தினி பட்டி, அரசினம்பட்டி போன்ற பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் அன்னதான விழாவில் கலந்து கொண்டனர்.