வாலிபரை கத்தியால் கிழித்த ஆட்டோ டிரைவர் கைது

வாலிபரை கத்தியால் கிழித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-22 00:42 IST

குளித்தலை,

குளித்தலை வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை செக்கடி தெருவை சேர்ந்த குணா (27) என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ ஜெயராம் மீது மோதியது. அப்போது ஜெயராம் கையை நீட்டியபோது ஆட்டோவின் கண்ணாடி உடைந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சமாதானம் பேசி கண்ணாடி மாற்றி கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ இந்தநிலையில் சம்பவத்தன்று குணா, ஜெயராமிடம் தகராறு செய்து அவரை திட்டி கத்தியால் அவரது உடலில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த ஜெயராம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் குணா மீது போலீசார் வழக்குபதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்