மீஞ்சூர் பகுதிகளில் ஆவடி போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு

மீஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், மீஞ்சூர் ஆகிய இடங்களுக்கு நேற்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2023-09-29 10:52 GMT

ஆவடி போலீஸ் ஆணையரக பகுதிகளில் குற்றங்களை தடுக்க போலீசார், பொதுமக்கள் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 5-ந் தேதி செங்குற்றத்தில் நடத்தினர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக அமைப்பை சார்ந்தவர்களும், பொதுமக்களும் பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய புகார்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் மீஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், மீஞ்சூர் ஆகிய இடங்களுக்கு நேற்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து மீஞ்சூர் பஜார் மற்றும் பாடியநல்லூர் பகுதிகளில் போலீஸ் பூத் அமைக்கவும், அத்திப்பட்டு, சோழவரம் பகுதியில் உள்ள ஏரி கரை பகுதிகளில் சமூக விரோதி நடமாட்டத்தை கட்டுப்படுத்த சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் மீஞ்சூர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனைகளை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார்.

இந்த ஆய்வின்போது செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை கமிஷனர் விஜயலட்சுமி, செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்