ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-02-02 21:21 GMT

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி உலகம் முழுவதும் ஈர நில நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அகில்தம்பி அறிவுறுத்தலின்படி, வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களை ஈர நிலத்திற்கே அழைத்து சென்று ஈர நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து சாண்டில்யன் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் வனவிரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரக அலுவலர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்