சமரச மையம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

அம்பையில் சமரச மையம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Update: 2023-04-10 21:21 GMT

அம்பை:

அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், அம்பை தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார் தலைமையில் கோர்ட்டுகளில் செயல்படும் சமரச மையத்தை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. வழக்குகளை விரைந்தும், சுமுகமாகவும் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சமரச மையத்தின் செயல்பாடுகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை பஸ்களில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமார், குற்றவியல் நடுவர் பல்கலை செல்வன், வக்கீல்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்