இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம்

ஆரணி நகரில் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-07-16 11:34 GMT

ஆரணி

இந்து முன்னணியின் சார்பாக ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகில், புதிய பஸ் நிலையம் அருகில், கோட்டை மைதானம் அருகில் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், நகர செயலாளர் எஸ்.முத்துசாமி, நகர துணைத்தலைவர் எம்.லோகு ஆகியோர் தலைமையில் தனித்தனியே விழிப்புணர்வு பிரசார தெருமுனை கூட்டங்கள் நடந்தது.

இதில் மாநில பிரசார ஒருங்கிணைப்பாளர் வேலூர் ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, உலகிலேயே சிறந்த மதம் இந்து மதம் தான், இந்துக்கள் வேற்று மத கடவுள்களை வெறுப்பதில்லை, இந்துக்களை மோசடி செய்தும் பயமுறுத்தியும் மதம் மாற்றுகிறார்கள்,

இந்து மதத்தை மட்டும் இழித்து பழித்தும் பிரசசாரம் செய்கிறார்கள். சினிமா, டி.வி., இணையதளங்களில் இந்து மதத்தை மட்டும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.

பெருமைமிக்க உலக சகோதரத்துவத்தை போற்றும் இந்து மதத்தை காக்க பாடுபட வேண்டும். நம் மதம், நம் சாமி, நம் கோவில் காக்கும் பணியில் ஈடுபடுவோம் என்றார்.

கூட்டத்தில் மகளிர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்