நெகமத்தில் மகளிர் குழுவினருக்கு விழிப்புணர்வு

நெகமம் பேரூ ராட்சியில் சுகாதாரம், குப்பையை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-07-12 22:02 IST

நெகமம்

தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் நெகமம் பேரூ ராட்சியில் சுகாதாரம், குப்பையை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி சமுதாய நல கூடத் தில் நடைபெற்றது.

இதற்கு பொள்ளாச்சி வடக்கு சமுதாய ஒருங்கிணைப்பாளர் கவிதா தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா பேசியதாவது:- பேரூராட்சி பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.

இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தூய்மை காக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்காக மகளிர் சுய உதவி குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

வீடு சுத்தமாக இருந்தால், வீதி சுத்தமா கும். வீதி சுத்தமானால் பேரூராட்சி தூய்மையாக மாறும். என் குப்பை, என் பொறுப்பு என்ற திட்டப்படி வீடுகள் தோறும் 2 குப்பை கூடை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்