பயணிகள் கவனத்திற்கு... நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

கொல்லம் -தாம்பரம் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-12-24 08:54 IST

சென்னை,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரெயில்களாக நெல்லை, பொதிகை அதி விரைவு ரெயில்கள் உள்ளன. நெல்லை அதி விரைவு ரெயில் தினசரி சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது. இதுபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே பொதிகை விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை -சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12632), நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. வருகிற 1-ந் தேதி முதல் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது 8.50 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூருக்கு 7 மணிக்கு பதில் 7.10 மணிக்கு சென்றடையும்.

செங்கோட்டை -சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) ரெயில் தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது. 1-ந் தேதி முதல் 6.50 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6.10 மணிக்கு பதில், 5.55 மணிக்கே எழும்பூரை சென்றடைகிறது.

இதுதவிர செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் -தாம்பரம் ரெயிலின் (16102) வேகம் அதிகரித்து, பயண நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தற்போது தாம்பரத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்கிறது. வருகிற 1-ந்தேதி முதல் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு 1.25 நிமிடங்கள் முன்னதாக, அதாவது காலை 6.05 மணிக்கு சென்றடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்