நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக்கூடாது: வனத்துறை எச்சரிக்கை
வனத்தில் அத்துமீறி டிரோன் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;
மலைகளின் அரசியான நீலகிரிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நீலகிரியின் இயற்கை அழகை ரசிப்பதுடன் காலநிலையை அனுபவிக்கவும் வருகின்றனர்.
இதனிடையே, சில சுற்றுலா பயணிகள் தடையை மீறி அடர்ந்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஹிடன்ஸ்பாட் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்து டிரோன் கேமராக்களை பறக்க விட்டு வீடியோவும் பதிவிடுகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக்கூடாது வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உதகையில் தலைகுந்தா முதல் பைன் காடுகள் வரை உள்ள வனப்பகுதியில் அத்துமீறி யாரும் நுழைக்கூடாது. வனத்தில் அத்துமீறி டிரோன் பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.