பள்ளி கல்வித்துறை சார்பில்மத்தூரில் விழிப்புணர்வு ஊர்வலம்

பள்ளி கல்வித்துறை சார்பில் மத்தூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-10-06 01:15 IST

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார வளமைய மத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு ஊர்வலம் மத்தூரில் நடந்தது. பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் ஒருங்கிணைப்பாளர் நாகசாமி மற்றும் அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்