புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

கெலமங்கலத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-30 18:45 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் வட்டார வளமையத்தில்பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் வேதா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ணதேஜஸ்,கோவிந்தப்பா ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அங்குள்ள பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 15 வயது முதல் கல்வி கல்லாதோர் இத்திட்டத்தில் சேரவும், ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயன்பெறவும், ஆண்டு இறுதியில் கற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் சிறப்பு ஆசிரியர்கள், கணக்காளர்கள், இயன்முறை மருத்துவர்கள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் வேடியப்பன், கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்