விழிப்புணர்வு உறுதிமொழி

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-12 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், `எனது குப்பை எனது பொறுப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் தனலட்சுமி, மாலதி, சுகாதார அலுவலர் இளங்கோ, ஆய்வாளர்கள் சிவா, சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்