மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-07-15 15:21 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்தவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இந்த ஊர்வலம் பஸ்நிலையத்தில் தொடங்கி மணிக்கூண்டு, பழனி சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக மீண்டும் பஸ் நிலையம் வந்து நிறைவுபெற்றது. இதில் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்