உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-10-26 18:45 GMT

ஆரணி

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் நடமாடும் சோதனை வாகனம் மூலம் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு உணவு கலப்படம், உணவின் தரத்தையும் பரிசோதித்தல் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை தாங்கினார்.

பயிற்சியினை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறுகையில் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து நடமாடும் உணவு பாதுகாப்பு வாகனத்தை மாணவிகள் பார்வையிட்டனர்.

எண்ணெய், பால் ஆகியவற்றை தரம் சரிபார்க்கும் கருவிகள் ஆகியவற்றை பார்த்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்