விழிப்புணர்வு வாகனம்

விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி தொடங்கி வைத்தார்.;

Update:2023-02-10 00:49 IST

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க பேரணி நடைபெற்றது. அப்போது விழிப்புணர்வு வாகனத்தில் கொத்தடிமை ஒழிப்பு குறித்து வாசகம் எழுதி வாகனத்தை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். இதில் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலையில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது. அவர்களை கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்