மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Update: 2022-06-06 18:02 GMT

ராமேசுவரம், 

சேலத்தில் உள்ள சைக்கிள் அகாடமி சார்பில் சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்தும், சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு நல்ல ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றும், அதுபோல் மோட்டார் சைக்கிள், கார் ஓட்டுவதை அதிகமாக குறைத்து சைக்கிள் பயன்படுத்துவதன் மூலம் மாசு ஏற்படுவது தடுக்கப் படும் என்பதை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி சேலத்தில் இருந்து சைக்கிள் அகாடமி பயிற்சியாளர் தங்கராஜ் ராசேராஜன் தலைமையில் 6 பேர் கொண்ட மாணவர்கள் குழுவினர் சைக்கிள் ஓட்டியபடி புறப்பட்டு உள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று இரவு ராமேசுவரம் வந்தனர். இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்று சைக்கிள் ஓட்டியபடி விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். அதன்பின்னர் பஸ் மூலம் சேலம் புறப்படுவதாக அந்த மாணவர்கள் தெரிவித்தனர். சேலத்தில் இருந்து தனுஷ்கோடி வரை சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாணவர்கள் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்