பொள்ளாச்சி அமைதி நகரில் அய்யப்ப பக்தர்கள் பஜனை வழிபாடு
பொள்ளாச்சி அமைதி நகரில் அய்யப்ப பக்தர்கள் பஜனை வழிபாடு;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஜோதி நகர் அருகில் உள்ள அமைதி நகரில் ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் சார்பில் 33-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அய்யப்ப பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், முருகன் மற்றும் அய்யப்ப சாமிகளுக்கு வாழை மட்டைகளால் கோபுரம் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. முடிவில் 18 படிகளில் தீபம் ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.