பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும் - அன்புமணி பேட்டி
விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.;
மதுரை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேசிக்கொண்டு இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம். இன்று கூட்டணி குறித்து எதுவும் பேச முடியாது. பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.”
இவ்வாறு அவர் பேசினார்.