கடலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.2.5 லட்சம் கொள்ளை - திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கம் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் 13 கிராம் நகை திருடப்பட்டுள்ளது. இதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த சித்ரா என்பவரின் வீட்டில் பீரோவில் இருந்த வெள்ளி அரைஞான் கயிறு மற்றும் 2 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.