பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

கீரப்பாளையம் பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-23 18:45 GMT

புவனகிரி, 

புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்