பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக விழா

பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக விழா

Update: 2023-06-03 18:45 GMT

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 23-ந் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக கணபதி வழிபாடு, அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 24-ந் தேதி சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. 2-ந் தேதி காலை பால்குடம், காவடி, ரத காவடி, பறவை காவடி, மயில் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வைகாசி விசாக திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர்கள் சிதம்பரநாதன், லோகநாதன் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் யோகேஸ்வரன், உதவி தலைவர் நாகநாதன், செயலாளர் பாலமுருகன், உதவிச் செயலாளர் செல்வ முனிஸ்வரன், பொருளாளர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்